சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 3 ஆண்டுகள் சிறை - புதுச்சேரி சிறப்பு மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு
புதுச்சேரி சாரம் சக்திநகரைச் சேர்ந்தவர் ரமேஷ்குமார் (34). பேண்டு மாஸ்டர். இவர் கடந்த 133.2003-ல் 15வயதுசிறுமி தனியாக வீட்டினுள் இருந்ததை பார்த்து அத்துமீறி நுழைந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதை வெளியே தெரிவித்தால் கடும் விளைவு களை சந்திக்க நேரிடும் என மிரட்டியுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி நடந்த சம்பவத்தை தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து சம்பவம் நடந்த பகுதி காவல் நிலையமான உருளையன்பேட்டை போலீஸாரிடம் பெற்றோர் புகார் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து இவ்வழக்கு போக்சோ நீதிமன்றத்தில் நடந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி சுமதி, குற்றவாளி ரமேஷ்குமாருக்கு போக்சோ சட்டம் 8-ன் கீழ் 3 ஆண்டுகள் சிறை தண்டனை நேற்று விதித்தார். மேலும் ரூ. 21 ஆயிரம் அபராதம் கட்ட உத்தரவிடப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடாக ரூ.1 லட்சம் தர அரசுக்கு நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.