குறைந்தபட்ச ஊதியத்தை உறுதிப்படுத்தியது - சென்னை உயர்நீதிமன்றம்
தொழிலாளர் குறைந்தபட்ச ஊதிய நிர்ணய அறிவிப்பை தடை செய்யக்கோரி முதலாளிகள் சார்பில் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
Article by V R Saravanan, Advocate, Puducherry, Cell:- 9994854777
புதுச்சேரி மாநிலத்தில் ஒன்பது ஆண்டுகளாக குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிக்கப்படாமல் கிடப்பில் கிடந்தது, தற்பொழுது புதுச்சேரி மாநில அரசு குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயம் செய்து ஒரு அரசு ஆணை வெளியிட்டது(G.O. Ms. No. 11/AIL/Lab/G/2024, 2024 செப்டம்பர் 2 தேதியிட்டது). இதில் குறைந்தபட்ச ஊதிய நிர்ணயம் சட்டத்தை பின்பற்றவில்லை என்று கூறி பல்வேறு முதலாளி அமைப்புகள் சென்னை உயர்நீதி மன்றத்தில் ரீட் மனு தாக்கல் செய்யப்பட்டது. (W.P. Nos. 3603, 2195, 1197, 1823, 1827 & 1832 of 2025)
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.தண்டபாணி கூறியதாவது:- இந்த மனுக்கள் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் சங்கங்களால் தாக்கல் செய்யப்பட்டன. இதில் குறைந்தபட்ச ஊதியச் சட்ட நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை, ஆலோசனைக் குழு அமைப்பு சரியில்லை, மற்றும் ஊதிய நிர்ணயம் தொடர்பான முறையற்ற காரணிகள் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்பட்டது, மனுதாரர் முதலாளிகளால் வாதிடப்பட்டது. புதுச்சேரி தொழிலாளர் துறை மற்றும் இந்திய தொழிற்சங்க மையம் (CITU) சார்பாக பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம், குறைந்தபட்ச ஊதியச் சட்டத்தின் பிரிவு 5 இல் குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன என்று கண்டறிந்து, அனைத்து ரிட் மனுக்களையும் தள்ளுபடி செய்தது. இது புதுச்சேரி அரசு மற்றும் இந்திய தொழிற்சங்க மையத்திற்கு (CITU) கிடைத்த வெற்றியாகும்.
வழக்கு தலைப்பு :-
W.P. No.3603 of 2025 : Manatec Electronics Pvt. Ltd. Versus The Union Territory of Puducherry
Comments
Post a Comment