மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி கற்பழிப்பு பிளம்பருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை புதுச்சேரி நீதிமன்றம் தீர்ப்பு
மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி கற்பழிப்பு பிளம்பருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை
புதுச்சேரி நீதிமன்றம் தீர்ப்பு
புதுச்சேரி முதல் வகுப்பு நீதித்துறை நடுவர் நீதிமன்றம் நேற்று (26.9.25) இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.
குற்றவாளி புதுச்சேரி, கோரிமேடு, மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சாமுவேல் சந்தோஷ் (வயது 38). இவர் பிளம்பர் வேலை செய்து வந்தவர்.
இவர் 04.09.2021 அன்று, தனது வீட்டில் 15 வயதுடைய மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை (கற்பழிப்பு) செய்துள்ளார்.
தண்டனை: போக்சோ (POCSO) சட்டம் பிரிவு 6 (1)-ன் கீழ், பாலியல் வன்கொடுமை செய்ததற்காக, குற்றவாளிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
ஐ.பி.சி (IPC) பிரிவு 342-ன் கீழ், 1 வருட கடுங்காவல் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.
இரண்டு தண்டனைகளையும் ஒன்றாக அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
நிவாரணம்: பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.4 லட்சம் அரசு நிவாரணம் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
Comments
Post a Comment