புதுவையைத் தொடர்ந்து தமிழகத்தில் காவல் நிலைய சித்திரவதை...
இந்தியாவில் காவலில் நடக்கும் மரணங்கள் ஒரு கடுமையான பிரச்சினையாக உருவெடுத்து உள்ளது.
Article by V R Saravanan Advocate Puducherry Cell:9994854777
புதுச்சேரி மாநிலத்தில் அண்மையில் தவளைகுப்பம் காவல் நிலையத்தில் ஒரு பெண்ணுக்கு நடந்த காவல் நிலைய சித்திரவதியை தொடர்ந்து தற்பொழுது தமிழ்நாட்டிலும் கொடுமை நடந்துள்ளது. புதுச்சேரி யானம் பகுதியில் முரளி மோகன் என்ற தொழிற்சங்க தலைவர் காவல் நிலைய சித்திரவதியின் கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து அப்பகுதியில் மிகப் பெரும் கலவரம் ஏற்பட்டது. தற்பொழுது தமிழ்நாட்டில் அஜித் குமார் என்ற இளைஞர் காவல்துறையால் கடுமையாக தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் இந்தியா மக்கள் மத்தியில் கோவம் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் காவலில் மரணங்கள்
கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழ்நாட்டில் 31 காவலில் மரணங்கள் நிகழ்ந்துள்ளன, ஆனால் ஒரு காவல்துறை அதிகாரி கூட தண்டிக்கப்படவில்லை. 2019-2020 காலகட்டத்தில்,
தென்னிந்தியாவில் காவலில் அதிக மரணங்கள் நடந்த மாநிலங்களில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் இருந்தது, 490 மரணங்கள் பதிவாகின. டிசம்பர் 2022 நிலவரப்படி, தமிழ்நாட்டில் 2,129 கைதுகள் நிகழ்ந்துள்ளன, இதில் 38.5% தலித்துகள் மற்றும் கிட்டத்தட்ட 38% விளிம்புநிலை மற்றும் சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
இந்தியாவில் காவலில் மரணங்கள்.
இந்தியா முழுவதும் 2016-17 முதல் 2021-22 வரை 11,656 காவலில் மரணங்கள் பதிவாகியுள்ளன. இதில் உத்தரப் பிரதேசத்தில் அதிகபட்சமாக 2,630 மரணங்கள் பதிவாகியுள்ளன. 2022 ஆம் ஆண்டில் மட்டும் 73 பேர் காவல்துறை காவலில் இறந்தனர். 2017 முதல் 2022 வரை காவல்துறை காவலில் நிகழ்ந்த மரணங்களுக்காக ஒரு காவல்துறை அதிகாரி கூட தண்டிக்கப்படவில்லை.
இந்த புள்ளிவிவரங்கள் காவலில் மரணங்கள் மீதான பொறுப்புக்கூறல் மற்றும் நீதி கிடைப்பதில் உள்ள பெரும் சவால்களை எடுத்துக்காட்டுகின்றன.
Comments
Post a Comment