பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து கோரும் தம்பதிகள் ஆறு மாத காலம் காத்திருக்க தேவையில்லை. சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு
திருமணம் விவாகரத்து தொடர்பான மனுக்கள் தாக்கல் செய்ய, இந்திய விவாகரத்து சட்டம், பிரிவு 10A-ன் கீழ், கட்டாயமாக காத்திருக்க வேண்டிய காலக்கெடுவை ரத்து செய்ய, குடும்ப நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது என, சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
கட்டாய காத்திருப்பு காலத்தை நிறைவு செய்யாததால், விவாகரத்து மனுவை குடும்ப நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட மறுசீராய்வு மனுவை, உயர் நீதிமன்றம் விசாரித்தது.
பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து கோரும் தம்பதியர், காத்திருப்பு காலம் முடியும் வரை கட்டாயமாக காத்திருப்பது, அவர்களின் துயரத்தை மேலும் அதிகரிக்கும் என நீதிமன்றம் குறிப்பிட்டது. இந்த தீர்ப்பை ஆதரித்து, ஏற்கனவே கேரள உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மேற்கோள் காட்டியது. மேலும், இந்து திருமண சட்டம், பிரிவு 13B-ன் கீழ், ஆறு மாத காத்திருப்பு காலத்தை தள்ளுபடி செய்ய, நீதிமன்றங்களுக்கு அதிகாரம் உள்ளது என, உச்ச நீதிமன்றம் Shilpa Sailesh vs Varun Sreenivasan, 2023 வழக்கில் அளித்த தீர்ப்பையும் சுட்டிக்காட்டியது.
இந்த தீர்ப்புகளின் அடிப்படையில், பிரிவு 10A-ன் கீழ், பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து கோரும் தம்பதியர் கட்டாயமாக காத்திருக்க வேண்டிய காலக்கெடுவை ரத்து செய்ய, குடும்ப நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது என, சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
Cause Title: Shivkarthik G.S vs. Nil Parties
Comments
Post a Comment